தமிழ்நாடு

உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்த சோகம்...

நாகையில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

நாகை மாவட்டம், அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர்கள்  பழனிவேல் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர்.  நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பணிக்கு செல்வதற்காக வழக்கம்போல், உணவு தயாரிக்க சென்றுள்ளார் ராஜலட்சுமி. பாத்திரத்தில் நண்டு எடுத்துக் கொண்டு கொல்லைப் புறமாக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, மின்மின் அழுத்த கம்பி அறுந்து ராஜலட்சுமியின் மீது விழுந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் பழனிவேல், மின்கம்பியை கையால் தட்டியுள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.