தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் மேலும் பல கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நாளை முதல், மால்கள், யோகா பயிற்சி மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பெரிய நகைக் கடைகள் மற்றும் துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய கடைகள் அனைத்தும், நாளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை கடை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடைகளை சுத்தம் செய்யும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி, மற்றும் மக்கள் அதிகம் கூடாத வகையில், வாடிக்கையாளர்களை ஒழுங்கு படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை முதல் பெரிய கடைகள் அனைத்தும் திறக்கப்படும் நிலையில், சிறு வியாபார கடைகள் காலை முதலே திறக்கபட்டடிருந்தன.