தமிழ்நாடு

பாஜகவை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தும் விசிகவினர்.! இது தான் காரணமா? 

Malaimurasu Seithigal TV

சுவர் விளம்பரங்களை அழித்த பாஜகவினரை கைது செய்யக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் நடத்தி வருகின்றனர். 

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளன் பிறந்தநாள் குறித்த சுவர் விளம்பரங்களை பாஜக கட்சியினர் அழித்ததாக கூறி அவர்களை கண்டித்தும், குற்றவாளிகளை  கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சியினர்  வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அமைந்துள்ள அம்பேத்கார் சிலை காலடியில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்.தொல். திருமாவளன்  பிறந்தநாள் ஆகஸ்ட் 17 ம் தேதி வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் குமரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்து உள்ளார்கள். இந்நிலையில் குருந்தங்கோடு, இரணியல் பகுதிகளில் எழுதியுள்ள சுவர் விளம்பரங்களை பாஜகவை சேர்ந்தவர்கள் அழித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் சுவர் விளம்பரங்களை அழித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலை காலடியில் அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.