தமிழ்நாடு

அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யும் கட்சி பாஜக கிடையாது: அண்ணாமலை பேச்சு...

சட்ட மேதை அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றும் ஒரே கட்சி  பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்திலேயே, நிர்வாக சீர்கேடு தொடங்கி விட்டது என்றார்.

மேலும் தடுப்பூசி மையங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர், பிரதமர் உள்ளிட்டவர்களின் புகைப்படம் இடம் பெறுவதில் என்ன தவறு இருக்கிறது எனவும், ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் பிரதமர் படம் இடம்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவன், பாலகிருஷ்ணன் ஆகியோரைப் போல, அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யும் கட்சி பாஜக இல்லை என்றும், சட்ட மேதை அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றும் ஒரே கட்சி  பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.