shanmugam  
தமிழ்நாடு

“நீதித்துறையை கைப்பற்ற பாஜக சதி செய்கிறது..” -சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு!!

மதவெறி சக்திகளுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க ...

மாலை முரசு செய்தி குழு

பாஜக,  மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நீதித்துறையில் பல நீதிபதிகளை நியமனம் செய்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தூத்துக்குடியில் குற்றம் சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)  லிபரேசன் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 12வது மாநில மாநாடடு இன்று தொடங்கி  14 ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

எஸ்ஐஆர், தொழிலாளர் சட்ட தொகுப்புக்கு எதிராக நடந்த இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசுகையில்,  பிஜேபி அரசாங்கம் தன்னுடைய மத வெறி நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நிறைவேற்றுவதற்கு சாம, பேத, தண்டம் என்று சொல்லக்கூடிய அனைத்து விதமான வழிகளிலும் அவர்கள் தீவிரமான முயற்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தை அவர்களுடைய கைப்பாவையாக அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அங்கமாக இருக்கக்கூடிய இந்திய பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்க்கு விரோதமான முறையிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குள் பேசுவதற்கு அனுமதிக்காமல் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற திமிர்தனத்தில், எதை வேண்டுமானாலும் சட்டமாக்க முடியும், எதையும் வேண்டுமானாலும் எங்களால் செய்ய முடியும் என்ற முறையில் ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் 

மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மத்திய அரசாங்கத்தினுடைய நிறுவனங்களாக இருக்கக்கூடிய அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை போன்ற மத்திய புலனாய்வுத்துறை இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது நீதித்துறையில் இருக்கக்கூடிய பல நீதிபதிகளை அவர்கள் நியமனம் செய்கிறார்கள் அல்லது இருப்பவர்களை அவர்களது ஆட்களாக மாற்றிக் கொள்கிறார்கள் இப்போது நீதித்துறையில் நீதி கிடைக்காது என்கிற நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. 

இந்த சவால்களை எதிர்கொள்ள இடதுசாரிகளின் ஒற்றுமை என்பது மிக மிக மிக அவசியமான ஒன்று. இடதுசாரிகளின் ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயல்பாடும் தான் இந்த மதவெறி கும்பலினுடைய இத்தகைய தந்திரங்களை தகர்த்தெரிவதற்கான அணிவகுப்பாக இருக்கும். ஏற்கனவே ஒத்த கருத்துடைய பல பிரச்சினைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகள் இணைந்து நின்று தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது இன்னும் வலுப்பெற வேண்டும் ஆகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல முற்போக்கு சிந்தனையாளர்கள் பல முற்போக்கு அமைப்பாளர்கள் இணைந்து இடதுசாரி அணியை உருவாக்க வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம் 

நம்முடைய இடதுசாரிகளின் ஒற்றுமை ஒருங்கிணைந்த செயல்பாடு இது ஒரே அணிவகுப்பாக செயல்படுவதன் மூலமாகத்தான் இத்தகைய தாக்குதலில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க முடியும் 

மதவெறி சக்திகளை எதிர்த்து போராடுவதற்கு மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை என்பது மிக அவசியம் அந்த வகையில் மதவெறி சக்திகளுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒன்றுபட்டு ஒரு போராட்டத்தை நடத்துவதற்காக  முயற்சி இந்திய நாடு முழுவதும் நடக்கிறது 

தமிழகத்திலும் நாம் அத்தகைய ஓர் அணிவகுப்பை உருவாக்கியுள்ளோம் இந்த கட்சிகள் கடைபிடிக்கக் கூடிய நவீன தாராளமய கொள்கையால் நம்முடைய உழைப்பாளி மக்கள் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள் நவீன தாராளமய கொள்கைக்கு மாற்றாக இடதுசாரி கொள்கையை உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தக்கூடிய ஒரு பொருளாதாரக் கொள்கையை மாற்றிக் கொள்கையை நாம் முன் வைக்க வேண்டி உள்ளது பார்த்து கொள்கையை முன்வைத்து இடதுசாரிகளின் அணிவகுப்பை உருவாக்க வேண்டும்"என பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.