தமிழ்நாடு

முதலமைச்சர் குறித்து இழிவாக பேசிய பாஜக பிரமுகர்...மடக்கி பிடித்த போலீசார்...காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

Tamil Selvi Selvakumar

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

முதலமைச்சர் குறித்து அவதூறு :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டிபேட்டை தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரான இவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், அவரது குடும்பத்தை பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் பேசியுள்ளார்.

கைது செய்த போலீசார் :

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக வழக்கறிஞர் அணி பிரிவு சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட சைபா் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பாஜக பிரமுகர் ஜெகதீசனை கைது செய்தனர். 

தொடர்ந்து, பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜக கட்சியினர் இடையேயும், காஞ்சிபுரம் பொதுமக்கள் இடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.