தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக-வின் நிலை ஆராய, இன்று தமிழ்நாடு வருகிறது பாஜக மேலிட குழு!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து ஆராய பாஜக குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். 

தமிழ்நாடு அரசால், பாஜக-வினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆராய, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நான்கு பேர் அடங்கிய குழுவை இம்மாதம், 22ஆம் தேதி நியமித்தார். 

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, எம்.பி மோகன் ஆகியோர் இன்று மாலை, சென்னை வருகின்றனர். 

அதனை தொடர்ந்து சிறையில்  அடைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று குறைகளை கேட்டறிய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.