தமிழ்நாடு

மீனாட்சி கோவில் முன்பு பாஜகவினர் போராட்டம்  

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாயிலில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாயிலில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 300 மேற்பட்ட தொண்டர்கள், பிரமுகர்கள் பங்கேற்று உள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டத்தின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.