தமிழ்நாடு

”திமுகவை அரசியல் ரீதியாக முடக்க நினைக்கிறது பாஜக” அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு!

Tamil Selvi Selvakumar

திமுகவை அரசியல் ரீதியாக பாஜக முடக்க நினைப்பதாக, அமைச்சர் முத்துசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, அரசியல் ரீதியாக பெரிய தடையை திமுகவின் மீது ஏற்படுத்தவே இது போன்ற செயல்களை மத்திய அரசு செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பொன்முடி கண்டிப்பாக குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாகவும், இது போன்ற ரைடுகள் மூலமாக அமைதி திமுகவை முடக்க முடியாது எனவும் தெரிவித்தார்

மேலும், அண்ணாமலையை கண்டு திமுக அஞ்சுகிறது என்பதெல்லாம் தவறான ஒன்று என்றும், திமுக எதற்காகவும் அஞ்சாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.