தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் மழை... இடிந்து விழும் பள்ளிகள்!!!

Malaimurasu Seithigal TV

வெளுத்து வாங்கும் மழை... இடிந்து விழும் பள்ளிகள்!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் விவரம், வகுப்பறை வசதி இல்லாமல் நடைபெறும் வகுப்புகள் விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 பள்ளிக்கல்வித்துறை ஆய்வு:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் மேம்பாடு அடையவும், பள்ளிகளின் தரம் உயர்த்தவும் உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தெரிந்துகொள்ள:https://malaimurasu.com/KODAIKANAL-RAIN-BOATING-STOP-NEWS

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :

இந்த ஆய்வின்போது, தலைமை ஆசிரியர் கண்காணிப்பு பதிவேடு,  அனைத்து ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு மேற்பார்வை பதிவேடு ஆகியவை வைக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டுரை, பாடவாரியான நோட்டு புத்தகம், வீட்டு பாட நோட்டு புத்தகம், ஓவிய நோட்டு புத்தகம், வடிவியியல் நோட்டு புத்தகம், தேர்வு விடைத்தாள் மற்றும் தேர்வு நோட்டு, அறிவியல் ஆய்வகம் பயன்பாடு பதிவேடு, நூலக பாடவேளை, நூலக புத்தகங்கள் வழங்கப்படும் பதிவேடு மற்றும் இரண்டு மற்றும் நான்கு வரி நோட்டு புத்தகம் ஆகியவற்றை இன்றைய தேதி வரை கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்துகொள்ள:https://malaimurasu.com/19th-will-rain-in-tamilnadu

 
இல்லம் தேடிக்  கல்வி:

அதேபோல், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள பள்ளிகள்  விவரம், வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைப்பெறும் வகுப்புகள் விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, 6-8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செல்லும் இல்லம் தேடிக் கல்வி மையங்களின் விவர பதிவேடுகளையும், உயர்கல்வி வழிகாட்டி கால அட்டவணை மற்றும் நடத்தப்பட்ட பாடவேளை விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு இல்லம் தேடிக்  கல்வி என்ற திட்டத்தை அமல்படுத்துமாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.