தமிழ்நாடு

கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்…  

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

கடந்த 16ஆம் தேதி 2வது அலகில் கொதிகலனில் கசிவு ஏற்பட்டு அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு sqவந்த 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.