தமிழ்நாடு

விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Malaimurasu Seithigal TV

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
 
இதையடுத்து உடனடியாக போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக எந்த பொருளும் சிக்கவில்லை.

இதையடுத்து இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. எனவே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட நபர் யார்? அவர் ஏன் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறினார் என  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அந்த நபரா அல்லது வேறு யாரேனும் பின்னணியில் இருக்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.