தமிழ்நாடு

பொங்கலுக்கு ஊருக்கு போகணுமா இப்பவே டிக்கெட் புக் பண்ணுங்க!!!..

பொங்கல் விழாவை முன்னிட்டு தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வோருக்கு ஜனவரி 9, 16 தேதியோட முன்பதிவு செய்ய முடியும்.

Malaimurasu Seithigal TV

உலக நாடுகளில் கொரோனா பரவலும், ஓமிக்ரான் பரவலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் அதன் பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு  நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  வழிப்பாட்டு தலங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு வாரத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வோருக்கு பேருந்து மற்றும் இரயில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதனால், பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து தங்களுடைய சொந்த ஊருக்கு செல்கின்றவர்களுக்கு டிசம்பர் மாதமே முன்கூட்டியே பயணச்சீட்டை பதிவு செய்ய பேருந்து மற்றும் இரயில் சேவைகளை தொடங்கி இருந்த நிலையில் பேருந்து பயணத்துக்கு முன்பதிவு செய்யும் செயலி வரும் 9மற்றும் 16ஆம் தேதியோடு மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.