தமிழ்நாடு

கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி…  

ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திகுமரவேல். இவர்கள் குடும்பத்துடன் குருவியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவரது மகன் ரிஷிகேசவன்(12) குருவியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. இதனால் இவரது பெற்றோர்கள் நேற்று காலை க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குறும்பபட்டி அருகே உள்ள குவாரி பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. சிறுவனின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இறந்த சிறுவனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று வலிப்பு ஏற்பட்டு கல்குவாரி தண்ணீரில் விழுந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகபடுகின்றனர்.