தமிழ்நாடு

காதலியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறிய காதலன் கைது..!

காதலியின் பெற்றோரை திருமணம் செய்து வைக்க கோரி மிரட்டல்..!

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு அருகே பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிரப் போவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேல்டு சிட்டி பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் மதுரையை சேர்ந்த அஜ்மத் பைசல் என்ற இளைஞரும், திருமணி நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோரிடம், அவரை தனக்கு திருமணம் செய்து தராவிட்டால், பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர போவதாக கூறி அஜ்மத் பைசல் மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்த போலீசார், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.