தமிழ்நாடு

சிறுவர், சிறுமிகளிடம் ஆபாச பேச்சு: யூ டியூப் மதனை குறி வைத்த சைபர் கிரைம்

சிறுவர், சிறுமிகள் விளையாடும் ஆபத்தான ஆன்லைன் கேமில் யூ-டியூபர் மதன் என்பவர் ஆபாசமாக பேசுவதாக சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் வந்துள்ளதால் புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீஸ் மதன் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா ஊரடங்கில் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் முழுநேரமாக ஆன்லைன் கேம்களிலேயே தங்களின் நேரத்தை கழித்து வருகின்றனர். இதனை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட மதன் என்ற வாலிபர் குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு குறித்து விளக்க யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். ஆன்லைனில் விளையாடிக்கொண்டே கேமின் நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்து வந்திருக்கிறார் இளைஞர் மதன். அதனால் மதனின் அந்த யூ-டியூப் சேனலை ஏராளமான சிறுவர், சிறுமிகள் பார்க்கத் தொடங்கினர். அதனால் யூ-டியூப் சேனலுக்கு வருமானம் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில்தான், டாக்ஸிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனலில் விளையாட்டின் டிப்ஸ், டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதைவிட ஆபாசமான உரையாடல்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன. அதை சில சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வமாக ரசித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் வந்துள்ளதால் புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீஸ் மதன் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் உத்தரவிட்டுள்ளது.