தமிழ்நாடு

BREAKING; தொடர் மழையால்... 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்...

Muthu Lakshmi

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 22) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மாவட்டம் முழுவதும் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மழை காரணமாக தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, அருவிகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தனியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மு.வீரப்பன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.