தமிழ்நாடு

இந்த இடியாப்ப சிக்கலை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று.... அமைச்சர் கே.என்நேரு!!

Malaimurasu Seithigal TV

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சிகளில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு கிடைப்பதில் சிரமம் உள்ளதாகவும், சிரமத்தை குறைக்க மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, புதிய மின் இணைப்பு வழங்க மின் வாரியம் பல வழிமுறைகள் வைத்துள்ளதாகவும், அதை பின்பற்றி தான் வழங்க முடியும் எனவும், இது ஒரு துறை சார்ந்த விவகாரம் அல்ல, நகராட்சி நிர்வாகத்துறையும் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்நேரு,விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரி வசூல் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும், விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அபராதம் வசூலித்து அதனை regularise செய்தால் சட்டம் எதற்கு சட்டத்தை எடுத்துவிடுங்கள் என நீதிமன்றம் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.  இந்த இடியாப்ப சிக்கலை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நீதிமன்றம் வாயிலாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.