பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் பாஸ் குறித்து போக்குவரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்
- 2019 - 2020 ஆம் ஆண்டு கட்டணமில்லா பயண அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்
- சீருடை அணிந்திருக்கும் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் செல்லும்
- அரசுக் கலைக்கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணம் பொருந்தும்
- 2022 - 2023 கல்வி ஆண்டிற்கான புதிய பேருந்து பயண அட்டைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது
- சீருடையில் உள்ள மாணவர்ளை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டால் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்