தமிழ்நாடு

விமான நிலையத்தில் மீண்டும் பரபரப்பு..! விழுந்து நொறுங்கிய கண்ணாடி கதவு ..!

Malaimurasu Seithigal TV

சென்னை பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு முனையத்தில் ஊழியர்கள் செல்லும் நுழைவு வாயில் கண்ணாடி கதவு விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் திறந்து வைத்தார். பன்னாட்டு புறப்பாடு முனையம் அருகே விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் செல்லும்  நுழைவு வாயில் கண்ணாடி கதவின் ஒரு பகுதி உடைந்து நொறுங்கியது.

அப்போது பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி, உணவக ஊழியர்கள் சத்தம் கேட்டு ஓடினர்.  கண்ணாடி நொறுங்கிய கதவு அகற்றப்படாமல் அப்படியே இருப்பதால்  வாசலுக்கு வரும் ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர்.

டிராலி போன்ற தள்ளு வண்டியில் உணவு எடுத்து சென்ற போது கதவில் பட்டு நொறுங்கியதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

2012-ம் ஆண்டு திறக்கப்பட்ட விமான நிலையத்தில் 85க்கும் மேற்பட்ட முறை கண்ணாடி உடைந்தது. கடந்த 5 ஆண்டுகளாக கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் இல்லாத நிலையில் கண்ணாடி கதவு நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.