2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
சுற்றுப்பயணத்தின்போது பேசிய எடப்பாடி “பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுபயணத்தில் இரண்டாவது நாளாக இன்று வானூர், மயிலம், செஞ்சி பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சுற்று பயணம் மேற்கொண்டார். வானூர் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் இயக்கமாக அதிமுக இருக்குமென்றும் விழுப்புரம் விக்கிரவாண்டி திண்டிவனம் ஆகிய இடங்களின் நான் பரப்புரை மேற்கொண்டேன் ஆனால் வானூர் தொகுதியில் மக்கள் கூட்டம் அலைகடலென வந்துள்ளதாகவும் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார். விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதிமுக ஆட்சியில் பாதிக்கப்படும் விவசாயிகளை ஓடோடி வந்து பார்த்தோம் விவசாயிகளை பாதுகாக்கும் அரசு அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு உதவி செய்யாத அரசாக ஸ்டாலின் ஆட்சி உள்ளதாகவும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் பம்பு செட்டினை இயக்க மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் 524 வாக்குறுதிகள் கொடுத்ததில் பல கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை 75 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டதாக முழு பூசனிக்காயை சாப்பாட்டில் மறைக்கிற கட்சியாகவும் ஆட்சியாகவும் திமுக அரசு உள்ளதாகவும், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக அரசு
குடும்பத்தலைவிக்கு 1000 வழங்கியது ஆனால் 25 மாதம் கழித்து தான் கொடுத்தது அதனை கொடுப்பதற்கு சட்டமன்றத்தில் அதிமுக அரசு அழுத்தம் கொடுத்ததின் பேரில் உரிமை தொகை பெண்களுக்கு கிடைத்தது அதனை கொடுக்காமல் திமுக ஏமாற்ற பார்த்தது என குற்றஞ்சாட்டினார்.
52 மாதம் மக்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கவில்லை தேர்தல் வரை மட்டுமே மகளிர் உரிமை தொகை கொடுப்பார்கள் இது தேர்தல் பொய் பிரச்சாரம். அதிமுக ஆட்சிக்கு வந்ததால் பெண்கள் ஏழை மன நிறைவு பெறும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும் என கூறினார்.
திமுக அரசில் வரி மேல் வரி போட்டு மக்கள் மீது பாரத்தை போட்டுள்ளார்கள் மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு செய்வோம் என்றார்கள் அதனை செய்யவில்லை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன் ரத்து என்றார்கள் செய்யவில்லை நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று 4 வருடங்களாக கூறி அதனை ரத்து செய்யவில்லை இரட்டை வேடம் போடும் கட்சியாக திமுக உள்ளதாக கூறினார். திமுக குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த கட்சியில் பதவி. கலைஞர், ஸ்டாலின், பிறகு உதயநிதி இப்பொழுது இன்பநிதி. இந்த குடும்ப அரசியலை வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை ஒழித்து கட்டவேண்டும், படிப்பு என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கசக்கிறது என ஸ்டாலின் கூறுகிறார் படிப்பு என்றால் எனக்கு உயிர் மூச்சு தமிழகத்தில் சட்டக்கல்லூரி பொறியியல் கல்லூரி வேளாண்மை கல்லூரி என ஏராளமான கல்லூரியை திறந்து வைத்தது அதிமுக ஆட்சி தான் கலைஞர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்பதால் பல்கலைக்கழகத்தினை திறப்பவர்கள் தான் திமுக அரசு
அம்மா பல்கலைக்கழகத்தினை ரத்து செய்த திமுக அரசு என குற்றஞ்சாட்டினார். படிப்பை பற்றி உள்ளங்களுக்கு என்ன தெரியும்? இந்தியாவிலையே அதிமுக தான் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தது கல்விக்கு எதுவும் செய்யாதது தான் திமுக அரசு
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு மூலமாக 2500 மாணவர்கள் மருத்துவம் பயில்கிறார்கள், வீரம் பேசும் ஸ்டாலின் அரசியலமைப்பு சட்டம் 162 பயன்படுத்தமுடியுமா, இந்தியாவிலேயே எந்த ஒரு முதலமைச்சரும் அரசியலமைப்பு சட்டம் 162 ஐ பயன்படுத்தவில்லை தான் மட்டுமே பயன்படுத்தியதாக கூறினார். அதிமுக அரசு பற்றி பேசும் அருகதை ஸ்டாலினுக்கு இல்லை பாஜகவை கண்டு நாங்க நடுங்கவில்லை ஸ்டாலின் தான் நடுக்கத்தில் இருக்கிறார்.
எதற்கு அஞ்சாத கட்சியாக அதிமுக உள்ளது நான் தான் தலைவர் எனக்கு பின்னால் பேரன் என்று கூறும் கட்சி அதிமுக இல்லை யார் வேண்டுமானாலும் இந்த இயக்கத்தில் பதவிக்கு வரலாம்
அதிமுகவை உடைக்க பல திட்டங்களை போட்டார் ஸ்டாலின் முதலில் உங்க கட்சி காப்பாத்துக்காங்க தேர்தல் நேரத்தில் உங்க கட்சியை சார்ந்தவர்கள் எங்க இருப்பாங்கனு பார்துக்கோங்க என்றும் திமுக ஆட்சியில் அரிசி, உளுந்து துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது இதனை பற்றி அவருக்கு கவலை இல்லை ஆனால் ‘ஓரணியில் திரள்வோம்’ என ஸ்டாலின் தெரிவிப்பார்.
உங்களுடன் ஸ்டாலின் என்று அச்சடித்து வீடு வீடாக வந்து கொடுப்பார்கள் மகளை ஏமாற்ற ஸ்டாலின் போடும் நாடகம் தேர்தல் நேரத்தில் மக்கள் வாக்குகளை பெற நாடகத்தை அரங்கேற்றி வீடு வீடாக சென்று உங்களுடன் ஸ்டாலின் என்பார்கள் திண்னை கண்டாள் போர்வை போட்டு மக்கள் பிரச்சனைகளை கேட்டு கோரிக்கையாக பெற்ற மனுக்கள் எங்க போனது, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் வானூர் தொகுதியில் அதிமுக போட்டியிட்டாலும் கூட்டணியை சார்ந்தவர்களும் போட்டியிட்டாலும் வெற்றி பெற செய்ய வேண்டும்
தொகுதி மறுவரை செய்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் தொகுதி மறுவரை செய்தால் தமிழகத்தில் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் தெளிவு படுத்தி விட்டார். மத்திய அரசு வைச்சிட்டு மடைமாற்றம் செய்ய பார்க்கிறார்.
பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம். பேய் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் மக்களாட்சிக்கு வழி கொடுப்போம். தேர்தல் காய்ச்சல் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. பை பை ஸ்டாலின் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.