இடைத்தேர்தலில்.. சற்றுமுன் விஜய்யே எதிர்பார்க்காத "ஆதரவு".. சற்று தடுமாற்றத்தில் இருந்த தவெக முகாமுக்கு புதிய வருகை! 
தமிழ்நாடு

இடைத்தேர்தலில்.. சற்றுமுன் விஜய்யே எதிர்பார்க்காத "ஆதரவு".. சற்று தடுமாற்றத்தில் இருந்த தவெக முகாமுக்கு புதிய வருகை!

ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இதனால் ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

மாலை முரசு செய்தி குழு

சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

வருகின்ற அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

குறிப்பாக ராஜினாமா செய்தே அதே அதிமுக வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவதால் மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இதனால் ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

முன்னதாக முதல்வர் விஜய்யை காமராஜருக்கு பிறகு ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சியை வழங்குவதாக ஜி.கே. வாசன் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.