தமிழ்நாடு

“தனது எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர்” - அடுத்தடுத்து விலகும் அதிமுகவின் நிர்வாகிகள்.. தவெகவில் இணைய ஆலோசனையா?

தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mahalakshmi Somasundaram

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கலக்கம் வெற்றி பெற்ற நிலையில் திமுக அடுத்த நிலை வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில் எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், மூத்த தலைவர்களான எஸ். பி வேலுமணி மாற்று சி.வி சண்முகம் தரப்பில் ஒரு அணியும் என அதிமுக இரண்டாக பிரிந்தது. இதில் எஸ். பி வேலுமணி தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த பிரச்சனை பெரிதாகி எடப்பாடி எஸ்.பி வேலுமணி தரப்பினரின் கட்சி பதவிகளை பறித்து உத்தரவிட்டார்.

பின்னர் இருதரப்பினரும் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சமாதானமான நிலையில் நேற்று முன்தினம் சி. வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி மீது பல குற்றசாட்டுகளை வைத்திருந்த நிலையில் தற்போது அதிமுகவின் மூத்த நிர்வாகியான சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல். ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியை சேர்ந்தவர் சி. விஜயபாஸ்கர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், சமீப காலமாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்கள் மற்றும் நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. அதில் விஜய பாஸ்கர் கட்சியின் சில முடிவுகள் தொடர்பாக அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமை பண்பு மற்றும் தலைமையை விமர்சிக்கும் விதமாக “தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல.. ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” மறைமுகமாக துப்படியை விமர்சித்து பதிவிட்டுருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தனது எம்.எல்.ஏ பதவியை சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் சட்டப்பேரவை சபாநாயகரிடம் நேரில் சந்தித்து வழங்கினார். சி. விஜயபாஸ்கரின் ராஜினாமா முடிவு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவரது இந்த நடவடிக்கை கட்சிக்குள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக கருதப்படும் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவில் இருந்து விலகிய பலர் தற்போது விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிலையில் இவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படும் நிலையில் என்ன நடக்கும் என்பதை காத்திருந்தித்தான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.