தமிழ்நாடு

9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரலாம்…

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.