முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஐ.ஐ.டி.வளாகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும், பின்னர் காலை 11 மணியளவில் திமுகவின் ஒரு கோடி பேர் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியிலும் பங்கேற்பதாக இருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் கேரளா சென்று திரும்பி இருந்த நிலையில் அவருக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதால் காலை முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றது, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் சற்று ஓய்வு தேவைப்படுவதால் இன்று காலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.