தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு ....தமிழக அரசு அரசாணை வெளியீடு....!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

2022-ம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்  ,இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 20 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், கரும்பு விடுபட்டிருந்ததை அடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்காக 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு கரும்பு வழங்க ரூ.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..