தமிழகத்தில் ஊராட்சி நியமன குழுக்கள், ஊராட்சி செயலர் பதவிக்கு ஆட்களை நியமிக்க முடியாது என தமிழக அரசு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
கிராம ஊராட்சிகளில் ஐந்து விதமான நிலைக்குழுக்கள் உள்ளன. நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய குழுக்கள் உள்ளன. இதில் ஊராட்சி நியமன குழுவில் செயலர் பதவிக்கு யாரை வேண்டும் என்றாலும் நியமனம் செய்து கொள்ளலாம் என்ற விதி இருந்தது.
இந்நிலையில் தற்போது இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஊராட்சி நியமன குழுக்கள், ஊராட்சி செயலர் பதவிக்கு ஆட்களை நியமிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஊராட்சிகள் குழுக்கள் விதிகளை திருத்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊராட்சி செயலரை தவிர்த்து மற்றவர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.