தமிழ்நாடு

தொண்டர்களை சந்தித்த கேப்டன்...! வாழ்த்து தெரிவித்த சத்யராஜ்..!

Malaimurasu Seithigal TV

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.
 
சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். கோயம்பேடு முழுவதும் நூற்றுக்கணக்கான கட்சி கொடி கட்டப்பட்டு உள்ளது. மேலும் மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் இளைய மகன் சண்முக பாண்டியன், அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், கழக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ், பார்த்தசாரதி மற்றும் அக்பர், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று விஜயகாந்த் தொண்டர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் உடல் நிலை சரியில்லாத கரணத்தால் சந்திப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு தேமுதிக அலுவலகம் களை கட்டியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை நடிகர் சத்தியராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.