தமிழ்நாடு

கார் கவிழ்ந்து விபத்து; மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம்..!

Malaimurasu Seithigal TV

சென்னை, தியாகராய நகர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வர்ஷூ, ஓமந்தூரர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் நிலையில் அவரது காரில் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கார் தியாகரய நகர், ஜி.என். செட்டி சாலை மேம்பாலத்தில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாண்டி பஜார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.