victime kavin 
தமிழ்நாடு

நெல்லையில் ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை!! சிக்கியது போலீஸ் குடும்பம்!!

கவின் தனது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதும், சுர்ஜித் எச்சரித்துள்ளார்,

Saleth stephi graph

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோசமா வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாங்குநேரி முதற்கொண்டு பல அடுக்கடுக்கான கோர சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று மீண்டும் கவின் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் கவின் செல்வ கணேஷ் என்ற ஐடி ஊழியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்  இத்துணை பதற்றத்திற்கு காரணம்.

 பின்னணி!

பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், இவரது மனைவி மணி முத்தாறு பட்டாலியனிலும் வேலை பார்த்து வருகின்றனர்.  இவர்களது மகன் சுர்ஜித். இவர்தான் கவினை குத்தி கொலை செய்துள்ளார்.

கரணம் சுர்ஜித் அக்காவும், கவினும் பலகாலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தனது அக்காவோடு பேசக்கூடாது என பலமுறை கவினை எச்சரித்துள்ளனர் பலர். ஆனாலும் அவர் கேட்காமல் சுர்ஜித் அக்கா வேலை செய்யும்  சித்த மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்ததாக தெரிகிறது.

இந்நிலையில்கவின்  தனது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது சுர்ஜித் எச்சரித்துள்ளார்,சுர்ஜித் எச்சரித்துள்ளார், அப்போதும் கேட்காமல் அவர் பேசுவதை நிறுத்த முடியாது என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான்,  அவரின் முகத்தில் மிளகாய் போடி போடு சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, முதலில் தனியாக விசாரிக்கப்பட்டார், அவர் 1 மணி நேரம் காவல் நிலையத்தில் த்தில்  இருந்தார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணக்குமார் மற்றும் தாய் கிருஷ்ணகுமார் இருவர் இருவரும் குற்றவாளி பட்டியில் சேர்ப்பு.இந்த சம்பவம் தொடர்பாக 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, சுர்ஜித்துக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.