தமிழ்நாடு

"திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது" - எடப்பாடி குற்றச்சாட்டு

Tamil Selvi Selvakumar

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஜாதிய தீண்டாமை, வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுவதாக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை, கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை, 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கிய சம்பவத்திற்கு, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கடும் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

நெல்லை சம்பவம் ஒட்டு மொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல் என்றும், இதனை வழிப்பறி வழக்காக பதிவு செய்யாமல், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.