DMK MLAs black shirt protest 
தமிழ்நாடு

"மேகதாது, காவிரி, பட்ஜெட்... விவகாரங்களால் கொந்தளித்த திமுக-வினர்!" கருப்பு சட்டையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவர்

டெல்டா விவசாயிகளின் துயரத்தை எடுத்துக்காட்டும் வகையிலும், மேகதாதுவிலே அணைக்கட்டக்கூடாது என்ற வகையிலும் கருப்பு சட்டை

Vinvizhi Leninton

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். காவிரியில் ஆடி 18 அன்று டெல்டா விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்த நிலையில் இந்த ஆட்சியில் ஆடியில் வறண்டு போன காவிரியை விவசாயிகள் பார்ப்பதாகவும் அந்த டெல்டா விவசாயிகளின் துயரத்தை எடுத்துக்காட்டும் வகையிலும், மேகதாதுவிலே அணைக்கட்டக்கூடாது என்ற வகையிலும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நேற்றைய பட்ஜெட்டிலும் இளைஞர்களுக்கு ரூ. 4000 தராதது, பெண்களுக்கு ரூ. 2000 கொடுக்காதது, எங்கு பார்த்தாலும் விவசாயிகள் போராட்டம் போன்ற காரணத்தால் இந்த அரசை 'அன் ஃபிட்' என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் விமர்சித்துள்ளார்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலை முன் வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், "பிளஸ்ட்.. பிளஸ்ட், என்று எதிர்பார்த்த மக்களுக்கு வேஸ்ட்.. வேஸ்ட்" என்று கிடைத்ததாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், "போன திமுக ஆட்சியில் கொண்டுவரட்டப்பட்ட திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டி மாற்றம்" என்று தருவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், காவிரி பிரச்சனையிலும், மேகதாது அணை விவகாரத்திலும் ஆளும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்உட்பட அனைவரும் கருப்பு உடையில் வந்து தலைமை செயலகம் வாயிலின் முன்பு கோஷங்களை எழுப்பினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.