தமிழ்நாடு

தொழிலதிபரை கட்டி வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய 10 காவல் அதிகாரிகள் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு  

சென்னையை சேர்ந்த தொழில் அதிபரை பண்ணை வீட்டில் கட்டி வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய  விவகாரத்தில்  காவல் அதிகாரிகள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துக்களை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை  திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்பட  திருமங்கலம்  காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள்  10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிபிசிஐடி வழக்கு பதிவு  செய்துள்ளதால் 10 காவல் அதிகாரிகளும் எப்போது  வேண்டுமானாலம் கைது செய்யப்படலாம் என்பதால்  காவல்துறை வட்டாரத்தில்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.