தமிழ்நாடு

சைக்கிள் மீது வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியானது...!

Tamil Selvi Selvakumar

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி அருகே சைக்கிள் மீது வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஜடையம்பாளையத்தைச் சேர்ந்த  சாலை பணியாளர் ஆறுமுகம் என்பவர், தனது சைக்கிளில் தென் திருப்பதி நால்ரோடு வழியாக பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது, அவரின் பின்னால் வந்த பிக்-அப் வாகனம் எதிர்பாராவிதமாக ஆறுமுகம் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.