தமிழ்நாடு

உலக புலிகள் தினக் கொண்டாட்டம்; பொள்ளாச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சியில்  உலக புலிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் புலி வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்றனர். 

Malaimurasu Seithigal TV

உலக புலிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் பொள்ளாச்சியில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, பொள்ளாச்சி துணை இயக்குனர் கணேசன் தலைமையில் உலக புலிகள் தினத்தையொட்டி புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வனபகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து  ஆனைமலை அடுத்த நா.மூ.சுங்கத்தில் துவங்கி ஆழியார் வரை பேரணி நடைபெற்றது.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பேரணியில் கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், உதவி வன பாதுகாவலர் செல்வம், மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்கள், புலி வேடம் போட்டு பேரணியில் பங்கேற்றனர். வனத்துறையினர் தங்களது முகத்தில் புலியின் தோற்றம் பொருந்திய டாட்டூ-வை வரைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை அடுத்து அட்டகட்டியில் உள்ள பயிற்சி முகாமில் புலிகள் வாழ்வியல் குறித்து கண்காட்சிகள் இடம் பெற்றது.