தமிழ்நாடு

பிரபலங்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு விளம்பரம் செய்வதை தவிர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Suaif Arsath

பிரபலங்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு விளம்பரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மது பழக்கம், புகையிலை சூதாட்டம் உள்ளிட்டவற்றுக்கு அடுத்த தலைமுறையினர் அடிமையாகி வருவதாக வேதனை தெரிவித்த அவர்,

இதனை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மது ஒழிப்பை தமிழகத்தில் படிப்படியாக கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பாமகவின் தலைவர் ஜிகே மணி தான் என குறிப்பிட்ட அவர், 2.0 திட்டத்திற்காக மட்டுமே தான் தலைவராக பதவியேற்றதாகவும் கூறினார்.