தமிழ்நாடு

4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளா மற்றும் அதன் எல்லையிலிருந்து விமானங்கள், ரயில்கள் மூலம் வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்தார். நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவ கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.