தமிழ்நாடு

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர்...! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...!

Malaimurasu Seithigal TV

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனை தொடர்ந்து  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அமித்ஷா இரவில் அங்கு தங்கினார். இந்த நிலையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார். பின்னர் பிற்பகல் 02.25 மணி அளவில்  தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அமித்ஷா,  சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.