chain theft in train news Admin
தமிழ்நாடு

முகநூல் நண்பரின் நூதன திருட்டு - நகையை திருடியவரை பிடித்த ரயில்வே போலீசார்

சற்று நேரத்தில் அவர் மயங்கவே அணிந்திருந்த இரண்டு மோதிரம், செல்போனை எடுத்துக் கொண்டு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

Anbarasan

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் இவருக்கு முகநூல் மூலமாக சிவகாசி திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த முனிஸ்வரன்(34) என்பவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் மதுரையில் இருந்து புனலூர் செல்லும் ரயிலில் ஏறி உள்ளனர். குணசேகர் அணிந்திருந்த நகையை திருடன் திட்டமிட்டு முனீஸ்வரன் அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார் சற்று நேரத்தில் அவர் மயங்கவே அணிந்திருந்த இரண்டு மோதிரம், செல்போனை எடுத்துக் கொண்டு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த குணசேகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.