தமிழ்நாடு

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்...

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்,  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுபெறக்கூடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையும், வேலூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி கோவை திண்டுக்கல் தேனி தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மழையும் பெய்ய கூடும் என பாலசந்திரன் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை தமிழகத்தில் 491 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளதாக பாலச்சந்திரன் கூறினார்.