தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tamil Selvi Selvakumar

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாளை வரை, மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.