தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்: இனி காலையில் கடை இருக்காது...

தமிழகத்தில் இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா பரவல் காலத்தில் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்று டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் நேரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டு வந்தன.
அதன்படி கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. 

இந்நிலையில், தற்போது திடீரென தமிழகத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.ஜூலை 5 ஆம் தேதி முதல் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.