தமிழ்நாடு

மாலைமுரசால், மருத்துவமனைக்கு வந்த விடியல்!!!

மாலை முரசு தொலைகாட்சியின் எதிரொலியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் அப்புறப்படுத்தியது.

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். அனைத்து நோய்களுக்கும், இங்கு சிகிச்சை அளிப்பதால், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, இருதய பரிசோதனை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உள்ளிட்ட 26பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

இதனால் சிகிச்சையின்போது வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் பிணவரை அருகே மலைப்போல் கொட்டப்பட்டு இருந்ததை, நேற்று முந்தினம் நமது மாலை முரசு தொலைக்காட்சியில் மட்டுமே, செய்தி பிரத்தேகமாக வெளியிடப்பட்டது.

அதன் எதிரொலியால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மருத்துவ கழிவுகளை பிணவரை அருகே உள்ள காலிமைதானத்தில் 5அடி பள்ளம் தொண்டி ஜெசிபி இயந்திரம் மூலம் கழிவுகளை அப்புறப்படுத்தியது. இதனால் மருத்துவமனைக்கு வரும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.