chengalpattu paiyanur news 
தமிழ்நாடு

"திரை கலைஞர்களுடைய நலனில் முழு அக்கறையோடு அரசு செயல்படுகிறது - துணை முதல்வர் உதயநிதி .

"செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தில் குடியிருப்புகள் கட்டுவதற்க்கான ஆணையை தளர்த்தி மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்க்குள் குடியிருப்புகள் கட்டுவதற்கான அரசாணையை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்"

Anbarasan

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை நிலத்தின் பயன்பாட்டை நீட்டித்து புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று  திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட சினிமா திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வின்  போதுவருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை செயலாளர் அமுதா , தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பூச்சி முருகன், நடிகர் கருணாஸ், பெப்சி சங்கத் தலைவர் இயக்குநர் செல்வமணி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திராவிட மாடல் அரசை பொருத்தவரை எப்போதுமே  கலைத்துறையினர் மீது கலை துறையினருடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது  .  திரை கலைஞர்களுடைய நலனில் என்றைக்கும் முழு அக்கறையோடு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்  சமேளணம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகிய உறுப்பினர்கள் பயன் பெறுகிற வகையில்  சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் இடத்தை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என  லீசுக்கு 99 ஆண்டுகள் கொடுக்கப்பட்டது.

அரசாணையின்படி அந்த இடத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டடங்களைக் கட்டி பயன்படுத்தி இருக்க வேண்டும். அது சிறிது காலதாமதம் ஆகிவிட்டது. இந்த ஆட்சி அமைந்த குத்தகைக்கு நிலத்தைப் பெற்ற சங்க நிர்வாகிகள்  முதலமைச்சர் சந்தித்து என்னை சந்தித்து  அந்த இடத்தை புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்கள்.

கோரிக்கையின் உடைய முக்கியத்துவத்தை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று  அரசாணையை  புதுப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கிய  90 ஏக்கர் நிலத்தின் இன்றைய மார்க்கெட் வேல்யூ 150 கோடி ரூபாய் இருக்கும்.

அதே இடத்தை திரைத்துறையினருடைய நலத்தைக் கருதி  அவர்களுக்கு குத்தகைக்கு விடுகிற அரசாணை புதுப்பிக்கப்பட்டு அவர்களிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மேற்குறிப்பிட்ட சங்கத்தினர் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம் என  தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுப்பிக்கப்பட்ட அரசாணை மூலம் இடத்தினைப் பெற்ற  திரைத்துறை சங்கத்தினருக்கு  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறன் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர்,

15 ஆண்டுகளுக்கு முன்பாக கலைஞர் ஆட்சி காலத்தில் சென்னையில் உள்ள 50 கி லோ மீட்டர் தொலைவில் 100 ஏக்கர் நிலத்தை கொடுத்தார் அன்று போல் இன்றும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது - அந்த ஆணை தற்போது புதுப்பிக்கபட்டு உள்ளது.

என்றும் சினிமா துரையின் மேல் பாசமும் அக்கறையும் வைத்து இருக்கும் முதல்வர் துணை முதல்வருக்கு நன்றி. இதன் மூலம் 5 சங்கங்கள் மூலம் ஒரு லட்சம் நபர்கள் பயன் பெறுவர்.

திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் படப்பிடிப்பு அரங்கங்கள் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி குடியிருப்புகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற ஆணையை தற்போது தளர்த்தி மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்க்குள் குடியிருப்புகள் கட்டுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்றார்.

ஆர்கே செல்வமணி பேட்டி

அந்த பகுதியில் குடியிருப்பு கட்டுவதற்காக தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் என்ற பெயரில் 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் என ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் தொகையை நடிகர் விஜய் சேதுபதி முன் பணமாக செலுத்தியுள்ளார் இதற்கு நன்றி செலுத்தும் விதமாக குடியிருப்பில் கட்டப்படும் டவர் ஒன்றில் அவருடைய பெயர் வைக்கப்பட உள்ளோம் என்றார்.