தமிழ்நாட்டு அரசு பால் நிறுவனமான ஆவின் பால், பல சிறப்பு தினங்களில் தங்களது பாக்கெட்டுகளை வித்தியாசமாக வடிவமைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருவது வழக்கம். அவ்வகையில், இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், ஆவின், தனது பாக்கெட்டுகளை வித்தியாசமாக வடிவமைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது. இந்த ஆண்டோடு, 75 ஆண்டுகள் முடிவடைகிறது. ஆசாதி கா மகோத்சவ் என்ற பெருவிழா கொண்டாடும் வகையில், ஆவின், தனது புதிய வடிவமைப்பில் பாக்கெட்டுகளை வெளியிட்டு, அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தது.
மேலும் படிக்க | ஆவின் பால்பாக்கெட்டில் “செஸ் தம்பி” புகைப்படம்...!