teachers protest Admin
தமிழ்நாடு

"மு.கருணாநிதி" கூட்டமாக இருந்த எங்களை.. உங்களுக்கு முடிவு கட்டும் கூட்டமாக மாற்றி விடாதீர்கள் - அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

எங்களின் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நாங்கள் நடத்தி வெற்றி பெறுவோம்.

Anbarasan

தமிழ்நாடு அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பாக நேற்று, சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கூட்டத்தில் பேசிய பொழுது திமுக அரசு தொடர்ந்து அரசு ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் என பலதரப்பட்ட நபர்களை ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கத்தை சேர்ந்த பீட்டர் அந்தோணிசாமி பேசுகையில்,

"ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது, எங்களையெல்லாம் எத்தனை முறை அழைத்து, 'எங்களை ஆட்சிக்கு வர வையுங்கள் முதல் கையெழுத்து உங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறேன்' என பொய்யான வார்த்தைகளை அளித்துள்ளீர்கள். அதனைத் தொடர்ந்து தேர்தலில் கொடுத்த வாக்கு உறுதிகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறீர்கள். மற்றவைக்கெல்லாம் நிதி இருக்கிறது எங்களுக்கென்று வரும் பொழுது மட்டும் எதுவும் இல்லையா?.

எங்களின் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நாங்கள் நடத்தி வெற்றி பெறுவோம். மு.க(மு.கருணாநிதி) கூட்டமாக இருந்த எங்களை உங்களுக்கு முடிவு கட்டும் கூட்டமாக மாற்றி விடாதீர்கள். ஆட்சி பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து எங்களை ஏமாற்றி உள்ளீர்கள்" என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்