சென்னை : மங்களுரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்டு விரைவு வண்டியில் சாந்தினி (29) என்ற நிறைமாத கர்பிணிப் பெண், திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியான தனது கணவர் அஸ்வின் குமார் என்பவருடன் நேற்று நண்பகல் 12.00 மணிக்கு பெரம்பூர் இரயில்வே மருத்துவமணையில் சிகிச்சை பெற சென்னைக்கு செல்ல வேண்டி திருப்பத்துார் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளனர்.
அப்போது நிறைமாத கர்பினியான சாந்தினிக்கு ரயில் பயணத்தின்போது பிரசவவலி ஏற்பட்டது. ரயிலானது மதியம் 2.20 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை எண்.2-க்கு வந்தபோது நடைமேடை அலுவலில் இருந்த பரமேஸ்வரி என்ற பெண் தலைமைக் காவலர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக சாந்தினியை ரயிலில் இருந்து இறக்கி அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று அமரவைத்து உடனிருந்து கவனித்துக் கொண்டார்.
மேலும் படிக்க | பிறந்தவுடன் குழந்தை இறந்தால் 60 நாட்கள் தாய்க்கு விடுப்பு.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு..!
இதற்கிடையே சாந்தினிக்கு பிரசவவலி அதிகமாகி சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அரக்கோணம் ரயில்வே மருத்துவர்களால் சாந்தினிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சுமார் 3.20 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரக்கோணம் அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் படிக்க | 14-வயது சிறுமியை திருமணம் செய்து ரகசிய வாழ்க்கை.. 7 மாதத்தில் பிறந்த குழந்தையின் பரிதாப நிலை..!
மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் உள்ள நிலையில் துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்பிணிப் பெண்னை ரயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்று பிரசவத்திற்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் பரமேஸ்வரியை ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் இருப்புப்பாதை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | 108 ஆம்புலன்சில் இரட்டைப் பிரசவம்! ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டு மழை!