தமிழ்நாடு

முன்னாள் அமைச்சருர் ஜெயக்குமார் நிபந்தனை ஜாமினிலிருந்து முற்றிலும் தளர்வு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நில அபகரிப்பு  வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில், முற்றிலும் தளர்வு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tamil Selvi Selvakumar

சென்னை துரைப்பாக்கத்தில் நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருக்கு கடந்த மார்ச் மாதம் நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு, அவர் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாமினில் வழங்கப்பட்ட நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்க தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில், முற்றிலும் தளர்வு அளித்து உத்தரவிட்டார்.