அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர்,விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என ஆரஞ்சு அலெர்ட்-டும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும், இந்த மழையானது 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கம், மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் லேசான மழை பெய்தது.
மேலும், சென்னையில் இன்று முதல் பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வாளரால் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மழையானது, பகல் நேரத்தில் அதாவது குறுகிய காலத்திற்கு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், அவ்வப்போது வெயிலும் எட்டிப்பார்க்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மழையின் தீவிரமானது மாலை முதல் இரவு வரை அதிகரித்து, அதிகாலை வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சென்னையில் அக்டோபர் 18ம் தேதி 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு அவர்களது தொலைபேசியில் அலாரம் விடுக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 17 அன்று சென்னையில் 'மேகவெடிப்பு' ஏற்பட்டது போன்ற அதீத மழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மறுநாளே தண்ணீர் பல இடங்களில் வடிய தொடங்கியது.
சென்னையில் அதீத மழை ஏற்பட்டாலும், அதை சமாளிப்பதற்கு பேரிடர் மேலாண்மை குழுவும் வருகை தந்துள்ளனர். மேலும், மீனவர்கள் அக்டோபர் 22-ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அக்டோபர் 20 மற்றும் 21 தேதிகளில் சோகோத்ரா தீவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், அக்டோபர் 21 மற்றும் 22 தேதிகளில் சோமாலிய கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.