special trains Admin
தமிழ்நாடு

கோடைக்கால சிறப்பு ரயில்: தாம்பரம்-திருச்சி அதிவேக சேவை ஏப்ரல் 4 முதல்!

நாளை காலை 8 மணிக்கு இந்த சிறப்பு அதிவேக ரயில்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Anbarasan

ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது

கோடைக்காலத்தை ஓட்டி தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு அதிவேக ரயிலானது மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு அதிவேக ரயிலானது இரவு 10.40 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதிகளில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில்கள் இதே நேரத்தில் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து புறப்படும் ரயிலானது தஞ்சை பாபநாசம் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் பண்ரூட்டி விழுப்புரம் திண்டிவனம் மேல்மருத்துவர் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது கூடுதல் நெரிசல்களை தவிர்க்கும் விதமாக இந்த சிறப்பு அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

நாளை காலை 8 மணிக்கு இந்த சிறப்பு அதிவேக ரயில்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்